கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா பாதிப்பில் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்படுகின்றன. இந்த சிவப்பு பகுதி என்பது அதிகமான மக்கள் நோய் உள்ள பகுதி. அதிகமாக நோயால் பாதிக்கப்பட்ட பகுதி. ஆரஞ்சு பகுதி குறிப்பிட்ட அளவுதான் நோய் ஏற்பட்ட பகுதி, பச்சை பகுதி யாரும் நோயால் பாதிக்கப் படாதமாவட்டம் என மூன்று வகையாக மத்திய அரசு பிரித்துள்ளது.
இதை மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, எந்த மாவட்டம் பச்சை மாவட்டமாக இருக்கின்றதோ அந்த பகுதியில் படிப்படியாக தொழில் துவங்குவதற்கு அரசு உங்களுக்கு சரியான உத்தரவு வழங்கும் அதை பின்பற்றி நீங்கள் அந்த பகுதிகளை தொழில் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கலாம்.
சில தொழிற்சாலைகளில் மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. சர்க்கரை ஆலைகள், ஜவ்வரிசி தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. மருத்துவ பொருட்கள் உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்து விடலாம், அதில் எந்த தடையும் இல்லை. ஆனால் தடை (சிவப்பு) செய்யப்பட்ட பகுதியில் அனுமதி கொடுக்காதீங்க. மற்ற பகுதிகளில் அனுமதி கொடுக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.