Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |