90’s கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சக்திமான் தொடர், ஏப்ரல் மாதத்திலிருந்து DD தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும்.

இதுகுறித்து சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், “130 கோடி இந்தியர்களும் மீண்டும் ஒன்றிணைந்து ‘சக்திமான்’ தொடரை பார்க்க தயாராகுங்கள். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் காத்திருங்கள் ” என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சக்தி மான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து சக்திமான் தினமும் 1 மணிநேரம் DD National தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நீங்கள் சக்தி மான் ரசிகர்களாக இருந்தால் பார்த்து ரசிக்க தயாராக இருங்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் சக்திமான் ரசிகர்கள் மீண்டும் சக்திமான் ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தற்போது சக்திமான் ஒளிபரப்படுகிறது. ஏற்கனவே கோரிக்கையின் படி மகாபாரதம், ராமாயணம் இரு தொடர்கள் டிடியில் ஒளிபரப்பாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.