செய்தியாளர்களிடம்பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் தான் உலகத்திற்கு கொடுக்க வேண்டும், விவசாயிகளை பிச்சைக்காரனாக வைத்து மாசத்திற்கு 2000, 6000 கொடுக்கிறார்கள் என்றால் அந்த நாடு நாடா என்று பார்க்க வேண்டும். ஒரு நாட்டில் வேளாண் குடிமகன் வாழுகின்றான், வளர்கிறான் என்றால் தான் அந்த நாடு வளருகிறது என்று பொருள். அவன் வாழவே முடியாமல் சாகுகிறான் என்றால், அது நாடு இல்லை சுடுகாடு என்றுதான் அர்த்தம்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் என 6000 ரூபாய் கொடுப்பது பற்றிய கேள்விக்கு, வேளாண் குடிமகனுக்கு நீங்கள் பிச்சை இடுகிறீர்கள்… மாதம் 2000, 6000 அந்த நிலை என்றால் அந்த நாடு எப்படி தன்னிறைவடையும், உணவு உற்பத்தியில் நிறைவடையும். எத்தனை நாளைக்கு நீங்கள் இன்னொரு நாட்டில் இருந்து உணவு தேவைக்கு சார்ந்து இருப்பீர்கள்.
நீங்கள் போர் விமானம் வாங்குகிறீர்கள், பீரங்கி வாங்குகிறீர்கள், துப்பாக்கி வாங்குகிறீர்கள், அரிசியும், பருப்பும், காய்கறியுமா வெளிநாட்டில் இருந்து வர வேண்டும்? இது எல்லாம் அந்த அளவிற்கு இந்த நாட்டில் வேளாண் குடிமக்கள் பின்தங்கி இருக்கிறார்கள்.
1000 ரூபாயை எதிர்பார்த்து கையேந்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது பெரும் துயரம். இதுயெல்லாம் தேச அவமானம். இதில் பெருமை அடைவதற்கு என்ன இருக்கிறது ? விவசாயிகள் தான் உலகிற்கு கொடுக்க வேண்டும். அவர்களையே கை ஏந்துகின்ற நிலையில் வைத்தது யாருடைய தவறு? இதை எந்த சாதனையும் சொல்லக்கூடாது, பெரியமையும், அடைய வேண்டியது இல்லை, இது மிகப்பெரும் வேதனை, அவமானம் என விமர்சித்தார்.