Categories
சினிமா தமிழ் சினிமா

டிடி, பிரியங்காவை ஓவர் டேக் செய்த தொகுப்பாளினி …. 2022-ல் முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா….????

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான பல தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஹீரோயின்களுக்கு இணையாக தொகுப்பாளினிகளுக்கும் நிறைய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகளாக இருக்கும் பிரியங்கா, கீர்த்தி, டிடி போன்ற பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக‌ பாலோயர்களை கொண்ட தொகுபாலினிகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கிக்கு அதிக பாலோயர்கள் லிஸ்ட்டில் முதலிடம் கிடைத்துள்ளது.

இவருக்கு 5.1 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு 2-ம் இடத்தில் இருக்கும் மணிமேகலைக்கு 3.4 மில்லியன் பாலோயர்களும், 3-ம் இடத்தில் இருக்கும் பிரியங்காவுக்கு 2.9 மில்லியன் பாலோயர்களும், 4-ம் இடத்தில் டிடி-க்கு 2.5 மில்லியன் பாலோயர்களும் இருக்கிறார்கள். மேலும் 5-ம் இடத்தில் இருக்கும் நட்சத்திரா நாகேஷுக்கு 2.4 மில்லியன் பாலோயர்களும், 6-ம் இடத்தில் இருக்கும் அஞ்சனாவுக்கு 1.4 மில்லியன் பாலோயர்களும், 7-ம் இடத்தில் இருக்கும் அர்ச்சனாவுக்கு 1.3 மில்லியன் பாலோயர்களும், 8-ம் இடத்தில் இருக்கும் ரம்யாவுக்கு 1.2 மில்லியன் பாலோயர்களும், கிகி என்ற கீர்த்திக்கு 1.2 மில்லியன் பாலோயர்களும் இருக்கிறார்கள்.

Categories

Tech |