Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.!!

சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த நெருப்பை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்தவரின் சாதுர்யமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Categories

Tech |