Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய பேருந்து….. தலையில் பலத்த காயம்….. இளைஞர் பலி…. சென்னை அருகே சோகம்….!!

சென்னை அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பொன்மனச்செல்வன். இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் துணை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அவரது மகன் அபிஷேக் தனியார் கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் அபிஷேக் தனது நண்பரை பார்க்க தாம்பரம் வரை சென்று இருந்தார்.

பார்த்து விட்டு வீடு திரும்பிய சமயத்தில் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |