பிரபல நடிகரின் தம்பி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘FIR’.
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், இவரின் சகோதரர் ருத்ரா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ”என் அன்புச் சகோதரர் ருத்ராவையும் நான் சினிமாவில் அறிமுகப்படுத்துவேன். அவரது அறிமுக திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்களை நாங்கள் இப்போது தேடுகிறோம்”. என பதிவிட்டுள்ளார்.
2022 will be special not just because of my films but because I will also be launching my dear brother #Rudra into cinema..
We're now looking for scripts for his feature film acting debut..
If you have something good, please reach out to us. Details in @VVStudioz tweet 🙂 pic.twitter.com/0JgYjSQQBT
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 20, 2021