Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றிய சகோதரர் – காப்பாற்றிய உறவினரும் படுகாயம்..!!

குடிப்பதற்கு பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற போது சகோதரரும் , காப்பாற்றிய உறவினரும் தீவிபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (39). இவர், திருமணம் நடைபெறாத விரக்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில், மகேஷ் திருவள்ளுவரில் வசிக்கும் தனது சகோதரி மஞ்சுளா(36) வீட்டிற்கு துக்க காரியத்துக்கு வந்துள்ளார்.

அங்கு குடிக்க பணம் கேட்டு, தனது சகோதரி மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, மகேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளா மீது ஊற்ற முயன்றார். இதைப் பார்த்த உறவினர் தமிழரசன்(48) மகேஷைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தத் தள்ளுமுள்ளில் மகேஷ் மீதும், உறவினர் தமிழரசன் மீதும் பெட்ரோல் தெறித்தது.

தொடர்ந்து ஆத்திரம் அடங்காத மகேஷ், தீயைப் பற்ற வைத்ததில் இருவரது உடலிலும் தீப்பிடித்தது. இந்நிகழ்வை நேரில் கண்ட உறவினர்கள் உடனடியாக இருவரின் உடலில் பற்றிய தீயை அணைத்து, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சீர்காழி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |