வருங்கால மனைவிக்கு முன்னாள் காதலியின் நகையைத் திருடி பரிசளித்த நபர் சிக்கிக் கொண்டார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆரஞ்சு சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதை கண்டுபிடித்தார். அதன்பின் மன வருத்தத்தில் இருந்த அவர் காதலனின் வருங்கால மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் அந்தப் பெண் நிச்சயதார்த்தத்தில் அணிந்திருந்த மோதிரத்தை போலவே தன்னிடமும் உள்ளது என்று எண்ணினார். மேலும் திருமண பேண்ட்டும் தன்னிடம் இருப்பதை போலவே கண்டார். அதன்பின் சந்தேகமடைந்த அவர் தனது நகைப் பெட்டியை திறந்து பார்த்தார். அவர் சந்தேகப்பட்டது சரி என்பதனை போலவே அவரிடம் இருந்த நகையை காணவில்லை.
இதுமட்டுமில்லாமல் மேலும் சில நகைகளும்,வைர மோதிரம் ஒன்றும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர். அதன் பின் அப்பெண் காதலன் மீது போலீசிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் திருட்டு வேலையில் ஈடுபட்ட நபருக்கு வாரண்ட் பிறப்பித்தனர். இதனை அறிந்த நிச்சயதார்த்தம் ஆன பெண்ணும், முன்னாள் காதலியும் அவரை விட்டுப் பிரிந்து சென்றனர்.
அதன்பின் அவரை நிச்சயதார்த்தம் செய்த பெண் மேலும் ஒரு புகாரை அவர் மீது அளித்தார். ஏனென்றால் டேவிஸ் ஒரு முறை வேறு ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அது தன்னுடைய வீடு என்று பொய் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்தப் பெண்ணுடைய நகைகளும்,லேப்டாப்பும் சமீப காலத்தில் காணாமல் போனதால் அதனையும் டேவிஸ் தான் திருடி இருப்பார் என்ற சந்தேகத்தில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. டேவிஸில் கையில் ‘Only God can judge me’ என பச்சை குத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.