Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்னை வா கடிக்க வந்த… சிறுவனின் வீரதனமான செயல்… மருத்துவமனையில் பரபரப்பு…!!

மருத்துவமனைக்கு பாம்புடம் சென்ற இளைஞனால் அங்கே இருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடிவிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காலை நேரத்தில் தனது நண்பர்களுடன் அருகில் அமைந்திருக்கும் குளத்திற்கு சென்று மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது காலில் கீழ்ப்புறத்தில் பாம்பு கடித்து உள்ளது. இதனால் வலியில் துடிதுடித்த மணிகண்டன் தன்னைக் கடித்த பாம்பை அடித்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து பாம்பை பாலித்தீன் பையில் வைத்து தனது நண்பர்களுடன் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதன்பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மணிகண்டன் என்ற சிறுவன் கையில் பாம்புடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காரணத்தால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் அங்கிருந்து ஓடிவிட்டனர். பிறகு பாம்பு ஏற்கனவே இறந்து விட்டது என தெரிந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பின்னர் மணிகண்டனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மணிகண்டனை கடித்த பாம்பிற்கு விஷம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து மருத்துவர்களுக்கு தெரியவில்லை. இதனை அறிந்து கொள்ள பாலித்தின் பையில் இருந்த பாம்பை மருத்துவர்கள் வெளியே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது பாம்பிற்கு விஷத்தன்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மணிகண்டனுக்கு மருத்துவர்கள் வழக்கமான சிகிச்சை மட்டும் அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தன்னைக் கடித்த பாம்பை கொன்று கையில் எடுத்து வந்த மாணவரால் மருத்துவமனை சிறிது நேரம் பரபரப்பில் காணப்பட்டுள்ளது.

Categories

Tech |