16 வயது சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டி சத்திரம் பகுதியில் 16 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது செவிலிமேடு மிலிட்டரி கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையின் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.