Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அதனை திரும்ப தரவில்லை” சிறுவனை கடத்திய நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடனை தொகையை திருப்ப தராத காரணத்தினால் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் இளைய மகன் ஹரிஷ் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டான். இதனையடுத்து ராஜசேகர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஹரிஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால்  ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் கோவை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் சிறுவன் ஹரிஷை காரில் வந்து கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணகுமார் செல்போன் சிக்னல் மூலமாக அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் சரவணகுமார் இருக்கும் இடத்தை அறிந்து  காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கடத்தி சென்ற சிறுவனை காவல்துறையினர் மீட்டு சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சரவணகுமாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடன் பிரச்சனை காரணத்தினால் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கோவையில் தங்கி வாடகை கார்களை ஓட்டும் பணியில் ராஜசேகர்  ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் சரவணகுமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜசேகர் சரவணகுமாரிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் கடனாகக் பெற்றுள்ளதாகவும் அந்தத் கடன் தொகையை ராஜசேகர் திருப்பிக் கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவல் காரணத்தால் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தர்மபுரிக்கு ராஜசேகர் வந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட சரவணகுமார் காரில் தர்மபுரிக்கு வந்து கடன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதன்பின் கடன் பணத்தை திரும்ப தராத காரணத்தினால் ஆத்திரமடைந்த அவர் ராஜசேகரின் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஹரிஷை கோவைக்கு கடத்தி சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணகுமாரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |