Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கேம் பைத்தியம்” ரீசார்ஜ் செய்ய தந்தை மறுப்பு….. கடலில் குதித்து மாணவர் தற்கொலை…!!

கன்னியாகுமரி அருகே தந்தை ரீசார்ஜ் செய்யாத மன விரக்தியில் கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆண்டனி டேனியல். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆண்டோ பெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்துள்ளார். ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் பெர்லின் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். அதேபோல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் அவரை அவரது பெற்றோர்கள் கண்டிக்கவும் செய்வார்கள். இந்நிலையில் செல்போனில் நெட்பேக் முடிந்ததால் ரீசார்ஜ் செய்யுமாறு தந்தையை பெர்லின் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவரது தந்தை மறுக்கவே தொடர்ந்து நச்சரிக்க, செல் போனை போட்டு உடைத்து விடுவேன் என்று கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பெர்லின் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வெளியே சென்ற அவர் பின் திரும்பி வீட்டிற்கு வரவே இல்லை. இதை அடுத்து ஊர் முழுவதும் மகனை தேடிய ஆண்டனி காவல் நிலையத்தில் தன் மகன் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வர,சவுக்கு தோப்பு கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் பிணத்தை ஆய்வு செய்யும் போது அது கோபித்துக் கொண்டு காணாமல் போன பெர்லின் உடல் என்பது தெரிய வரவே, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்களது பெற்றோர்கள் மகனின் உடலை கண்டு கதறி அழுதனர். தந்தை ரீசார்ஜ் செய்யாததாலும், திட்டியதன் காரணமாகவும் மனமுடைந்த பெர்லின் கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் பெர்லின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |