Categories
தேசிய செய்திகள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுமி… எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு… தீவிர விசாரணையில் போலீசார்..!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு இன்று  தகவல் கொடுக்கப்பட்டது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்தசிறுமியை லாரி டிரைவர் ஒருவர் எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் வல்லுநர்கள் மற்றும் மோப்பநாய்கள் அழைத்துவரப்பட்டு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் செயல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்..

Categories

Tech |