அமெரிக்காவில் சூட்கேஸில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிட்டனி ஸ்மித் என்ற 28 வயது இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.அவர் சமீப காலத்தில் காணாமல் போனதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நியூஸ் நதி அருகே ஒரு பெரிய சூட்கேஸ் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை போலீசார் கண்டனர். அதனருகில் சென்று திறந்து பார்த்தபோது காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளம் பெண் சடலமாக இருந்துள்ளது.
திருமணமாகாத பிரிட்டனி, கோடி பேஜ் என்பவரை காதலித்து அவருடன் வசித்து வந்தார். பிரிட்டனி குறித்து காதலன் கூறியதாவது, அவள் என் இதயமும், ஆத்மாவும் இருந்தாள். போதை மருந்து பழக்கமும், ரகசிய வாழ்க்கையும் அவளுக்கு இருந்தது. இதனால் எனக்கு உடன்படாத சில விஷயங்களை அவள் செய்து வந்தாள். மேலும் பல விஷயங்களை என்னிடம் இருந்து மறைத்தாள்.
கடந்த வாரம் ஜான்சன் என்பவர் பிரிட்டனியை அழைத்து செல்ல வருவதாக அவளின் செல்போனுக்கு மெசேஜ் வந்தது. அப்போதுதான் நான் அவளை கடைசியாக பார்த்தேன். என் உடலில் பாதி போய்விட்டது என்று கண்ணீருடன் கூறினார். மேலும் இதனை அறிந்த போலீசார் ஜான்சன் என்ற 37 வயதுடைய நபரையும், அவரது மனைவியான எமாலி கிரேஸ் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.