Categories
உலக செய்திகள்

46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை… சைபிரியா பிரதேசத்தில் கண்டுபிடிப்பு..!

சைபிரியாவில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஹார்ன்ட் லார்க் என்ற பறவையினுடையது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டின் சைபிரியா பிரதேசத்தில்  வடகிழக்கே இருக்கும் பெலாய கோரா (Belaya Gora) என்ற பகுதியில் ஹார்ன்ட் லார்க் (horned lark) என்ற பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த பறவை 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது.

Image result for Belaya Gora horned lark

இந்த தகவலை சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்து தெரிவித்தனர். இதை கேட்கும்போது நம்பாமல் இருக்கமுடியவில்லை என்றாலும் இது தான் நிதர்சனமான உண்மை.

Image result for Frozen bird found in Siberia is 46,000 years old

மேலும் இதேபோலவே அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஓநாய்கள், மம்மோத் (mammoth) எனப்படும் ராட்சத யானை மற்றும் கம்பளி காண்டாமிருகங்களின் உடல் பாகங்களையும் ஆய்வாளர்கள் மும்முரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த விலங்குகள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது என்று ஆராய்ச்சிக்கு பின் தெரியவரும்.

Categories

Tech |