நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை – கடலூரில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய அபாயத்தை குறிக்கின்றது. புயல் கரையை கடக்கும் போது இந்தத் துறைமுகம் அல்லது இதன் அருகே கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக ஏற்படும் கடுமையான பாதிக்கப்படும் துறைமுகமாக என இது அறிவிக்கப்படுவதாக இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு உணர்த்துகின்றது.
இந்த பகுதி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இந்த பாதிப்புக்குள்ளான பிறகு 11-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். அப்போது இந்த ஒட்டு மொத்த துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் தொலைத் தொடர்பு துண்டிக்கும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணத்தால் கடலோர மாவட்டத்தில் பெரும்பாலான தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணி நேற்று இரவில் இருந்தே நடந்து கொண்டு இருக்கின்றது. மிகக் கடுமையாக புயல் தாக்கும் என்பதை குறிக்கும் வகையில் 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.