Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகப்பெரிய அரசியல் சக்தி…. வரும் காலம் பாஜக காலம்… எல்.முருகன் நம்பிக்கை …!!

தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகிவரும் நிலையில், வரும் காலம் பாஜக காலம் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய  உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்.

பின்னர் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, மாநிலத் தலைவர் எல். முருகன், இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு, கெளதமி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது அமித் ஷாவிற்கு பாஜக மாநிலத் தலைவர் முருகன் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. பாஜக எங்கு எனக் கேட்டவர்கள் தற்போது எல்லா பக்கமும் பாஜக கட்சியை பார்த்து வருகின்றனர். மோடியின் ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், கரோனாவுக்கு பயந்து இன்று வரை வெளியே வரவில்லை. ஆனால், பாஜகவினர் உயிரை துட்சமாகக் கருதி சேவைகள் செய்து வருகிறோம். குடும்ப ஆட்சி திமுக ஊழலுக்கு பெயர் போனவர்கள். 65 லட்சம் பேர் வேல் பூஜையில் கலந்து கொண்டனர்.

அவர்களை ஆறுதல் படுத்த வெற்றி வேல் யாத்திரை நடத்தி வருகின்றோம். டிசம்பர் 5ஆம் தேதி திருச்சந்தூரில் வேல் யாத்திரை நிறைவு பெறும். வரும் காலம் பாஜக காலம். பூத் கமிட்டிகளை வலுபடுத்த வேண்டும்” என்றார்.

Categories

Tech |