Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை….. ஆட்டத்தை தொடங்கிய அதிமுக …!!

தீபாவளிக்கு பிகில் உட்பட எந்த படத்துக்கும் சிறப்பு கட்சிக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த 12_ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை செய்து வருகின்றது.

Image result for kadambur raji

 

மேலும் பிகில் படம் 25_ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜீ பிகில் உட்பட எந்த படத்துக்கும் சிறப்பு கட்சிகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார். நடிகர் விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த நிலையிலும் , பட வெளியீடுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அமைச்சர் அனுமதியில்லை என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |