Categories
Uncategorized

’96’ தெலுங்கு ரீமேக் பெயரை வெளியிட்ட படக்குழு

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ’96’ திரைப்படம். இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும் கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கிலும் ’96’ திரைப்படத்தை செய்யப்போவதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்தார்.

இப்படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும், விஜய் சேதுபதி பாத்திரத்தில் நடிகர் ஷ்ரவானந்த் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில், படக்குழு தெலுங்கு பெயரை தற்போது அறிவித்துள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரமான ‘ஜானு’ என்ற த்ரிஷாவின் பெயரையே தெலுங்கு படத்திற்கு படக்குழு சூட்டியிருக்கிறது.

samantha akkineni new movie titled jaanu

’96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, தெலுங்கு படத்திற்கும் இசையமைக்கிறார். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார்.

Categories

Tech |