திருநாவுக்கரசு_க்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரிய வழக்கை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் திருநாவுக்கரசு தாயார் செல்வி ஜாமீன் வழக்கு தொடர்ந்தார் . அந்த வழக்கு விசாரணையின் போது ,திருநாவுகரசு தலைமறைவாக இருந்ததை காரணம் காட்டி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.