Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு பதில் இவர்…. பிரபல ஹிட் சீரியலின் முக்கிய கதாபாத்திரம் மாற்றம்…!!!

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டுள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் சில சீரியல்களின் கதைக்களம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில் பல புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஆனால், அந்த சீரியலில் நமக்கு நன்கு பரிச்சயமான முகம் என்றால் அது சாரதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா தான். ஆனால், இவரும் தற்போது மாற்றப்பட்டுள்ளதால் வேறொரு நடிகை சாரதா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Categories

Tech |