Categories
மாநில செய்திகள்

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்… தேர்வுத்துறை!

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றிய முதல்வர் பழனிசாமி 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்தால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

அதேசமயம் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், வருகை பதிவுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏனெனில், 11ம் வகுப்பு செல்லும்போது என்ன குரூப் என்பதை தீர்மானிக்க வேண்டும் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட ஏதேனும் தொழிற்படிப்பிற்கு செல்லும்போது மாணவர் சேர்க்கையை தீர்மானிக்க மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |