சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். இன்று தொழிலில் அதிக உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் , அரசு சார்ந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பரிடம் கேட்ட உதவி வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானமும் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்கள் சலுகை விலையில் வாங்க கூடும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு கொஞ்சம் டென்ஷனை ஏற்படுத்தும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். கணவன் , மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தாய் , தந்தையின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மருத்துவச் செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று ஓரளவு மகிழ்ச்சியாகவே நீங்கள் காணப்படுவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி முக்கிய காரியங்களை செய்யும் பொழுது கேட்டு செய்வது நல்லது. உற்றார் உறவினர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். அன்பு கூடும் நாளாக இருக்கும். சின்ன , சின்ன வாக்குவாதங்கள் மட்டும் நீங்கள் தவிர்த்து விடுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் சின்ன , சின்ன பிரச்சனையில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுமான வரை தவிர்ப்பது நல்லது . இன்று நீங்கள் முருகன் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் உங்களுடைய வாழ்க்கை ரொம்ப சிறப்பாக இருக்கும்.
