கர்நாடகா – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
கர்நாடகா -ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் பலியான 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.