Categories
உலக செய்திகள்

என்ன காரணம்….? அனல் மின் நிலையத்தில்…. வெடி வைத்து தகர்க்கப்பட்ட புகைப்போக்கி….!!

ஸ்காட்லாந்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

ஸ்காட்லாந்து நாட்டில் நிலக்கரி மூலம் செயல்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த நாட்டில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடானது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பைப் தீபகற்பத்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த அனல் மின் நிலையத்தில் 600 அடி உயர புகைப்போக்கி தற்போது வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |