Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் நேர்ந்த விபரீதம்…!!

சேலம் அருகே சரிவர சிகிச்சை அளிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் சிறுநாயக்கன்பட்டி பகுதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்திவேலை  அனுமதித்தனர். கடந்த 4 நாட்களாக சக்திவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவ நிர்வாகம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 6 லட்ச ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து நிர்வாகம் தெரிவித்தது இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் எந்தவித அவசர சிகிச்சையும் அளிக்காமல் 6 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே வசூல் செய்ததாக குற்றம் சாட்டி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவரை சமாதானம் செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |