கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக பல இடங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது.
இதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவருடன் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்துள்ளனர்.