தட்டை செய்வதற்கு தேவையான பொருள்கள்:
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
எள்ளு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஓமம் – 1 டீஸ்பூன்
உருக்கிய நெய் – சிறிதளவு
உளுந்தமாவு – 1/4 டம்ளர்
பொட்டு கடலை மாவு – 1 ஸ்பூன்
அரிசி மாவு – 1/2 டம்ளர்
கடலை பருப்பு – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
தட்டை செய்முறை:
ஒரு பத்திரத்தில் அரிசிமாவு, உளுந்தமாவு , பொட்டு கடலைமாவு சேர்க்க வேண்டும். பின்பு அதனுடன் மிளகாய்த்தூள், எள்ளு, ஓமம் சேர்க்க வேண்டும். இதனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு மணிநேரம் ஊறவைத்த கடலை பருப்பை இந்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு உப்பு, நெய் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். மாவினை நன்றாக பிசைந்தும் அதனை ஒரு கவரில் எண்ணெய் தடவி அதில் வைத்து அழுத்தி வட்டமாக தட்டி கொள்ளவும்.
மீதமுள்ள மாவினையும் இது போன்று தட்டி தயார் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டிய மாவினை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான தட்டை தயார்.