பொதுவாக இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டும்தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றன.
தாம்பத்ய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமான ஒன்றாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.அந்த காலக்கட்டத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே மிகவும் வலிமையாக காணப்பட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் இன்றைய காலங்களில் எதற்கும் நேரம் இல்லை என்று கூறி, தாம்பத்யத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காண்பிப்பதாக தெரியவில்லை. வேலை சுமை, சோம்பல், சோகம் இதுபோன்ற பல காரணங்களால் தற்போது இருக்கும் தம்பதிகள் சரியான அளவில் தம்பதியா உறவில் ஈடுபடுவதில்லை .
தாம்பத்திய உறவில் முழு மகிழ்ச்சி அடையும் தம்பதியினர், படுக்கை அறையில் மட்டுமல்லாமல் வெளியிலும் மனதளவில் சரியான புரிதல் கொள்கிறார்கள் என்கிறது 24 நாடுகளில் 70 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு சொல்கின்றது. ஆனால் இல்லற வாழ்க்கையின் அங்கமான உடலுறவை பத்தோடு பதினொன்றாக எண்ணுபவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் மோசமாக அமைவதோடு கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் ஏற்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஆகவே இனிய தாம்பத்தியம் இனிய இல்லறத்திற்கு அவசியம் என்பது நினைவிருக்கட்டும்.