விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் பாக்கியலட்சுமி ஒன்று. கடந்த சில மாதங்களாக உச்சகட்ட பரபரப்பாக பாக்கியலட்சுமி சீரியல் சென்று கொண்டிருக்கிறது. தனது அப்பாவி மனைவி கைவிட்டு தனது தோழியான ராதிகாவை கோபி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கோபி வாழ்க்கையில் என்னென்ன திருப்புங்கள் ஏற்படுகிறது என்பதை கதையாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி தனது வீட்டில் மிகவும் சொகுசாக வாழ்ந்த கோபி ராதிகாவிடம் படாதபாடு பட்டு வருகிறார்.
ஒரு காபி கூட ராதிகாவிடம் கெஞ்சி வருகிறார். தெரியாமல் ராதிகாவிடம் மாட்டிக்கொண்ட கோபியின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். இதற்கிடையில் பாக்யாவின் மூத்த மகனான செழியனின் மனைவி ஜனனி கர்ப்பமாகிறார். இதனால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் கோபியை வெறுப்பேற்றும் விதமாக கோபியின் அப்பா கோபி மற்றும் ராதிகாவிற்கு இணைப்பு வழங்குகிறார். அதுமட்டுமில்லாமல் கோபி தாத்தாவாகிவிட்டதாக கூறுவதால் ராதிகா கடுப்பாகும் காட்சிகள் புரொமாவாக வெளியாகி உள்ளது.