Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ் எடுக்க போகும் அந்த தவறான முடிவு….. அமைதி காக்கும் ஓபிஎஸ்…. சட்டமன்ற கூட்டத் தொடரில் காத்திருக்கும் சம்பவம்….!!!!

அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்த பிறகு முதன்முதலாக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி தான் தற்போது அதிகரித்துள்ளது.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியதாக கூறி ஒரு கடிதம் எழுதி சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார். இதேபோன்று ஓ. பன்னீர் செல்வமும் என்னை கேட்காமல் யாருக்கும் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை கொடுக்கக் கூடாது தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஆனால் 2 பேரின் கடிதத்திற்கும் இதுவரை சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தான் யாருக்கு எந்த இருக்கைகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இபிஎஸ் கட்சி பிரச்சனைகளை காட்டிக்கொள்ள வேண்டாம் என தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஓபிஎஸ்-க்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை கொடுத்தால் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்றுவிடலாம் என இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக உட்கட்சி பூசல்களை காரணம் காட்டி சட்டசபையை புறக்கணித்தால் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமியின் மீது கடும் அதிருப்தி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |