லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேனாங்குடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரளம் லாரி உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமார் அவருடைய லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சூரக்குடி அருகே வந்து கொண்டிருக்கும்போது லாரியை நிறுத்திய நன்னிலம் தாசில்தார் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லாரி உரிமையாளர் குமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி லக்ஷ்மி பிரபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு கூறியுள்ளார். அதன் பின் அவர் நேரில் வந்ததும் ரசாயன பவுடர் தடவிய 8 ஆயிரம் ரூபாயை லக்ஷ்மி பிரபாவிடம் கொடுத்துள்ளார். அதன் பின்பு அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லட்சுமி பிரபாவை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.