சீர்காழி அருகே விவசாயம் செய்து வரும் பொறியியல் பட்டதாரி ஒருவர் தர்பூசணி சாகுபடியில் அமோக மகசூல் கிடைத்தும் கொரோனா ஊரடங்கால் விற்பனை இன்றி கடும் இழப்பை சந்தித்து உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
சீர்காழி தாலுக்கா திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராஜா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோடை கால பயிரான தர்ப்பூசணி சாகுபடி செய்தார். மூன்று மாத கால பயிரான தர்ப்பூசணி நல்ல மகசூல் கண்ட நிலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும் கொரோனா ஊரடங்கால் அவற்றை விற்பனை செய்ய முடியவில்லை.
இதனால் மூன்று ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் அனைத்தும் அழுகி விட்டதாகவும் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயம் செய்யும் பட்டதாரி இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.