Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி தரமான பொருட்களே கிடைக்கும்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை வழங்கியதற்காக  27 ரேஷன் கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையில் சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 2.19 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் கூட்டுறவு உணவு துறையின் கீழ் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மோசடி நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து தினத்தன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள்  பெரும்பாலானோர் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக குற்றம் தெரிவித்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் கண்காணிப்பு குழு அமைத்து நியாயவிலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்து மாதம் தோறும் மற்றும் மூன்று திங்கள்  சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும்  குடோன்களில் இருந்து பெறுதல்  ஆகியவற்றை ஆய்வு செய்து ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில்  இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து தொடர்ந்து மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்  கடந்த சில வாரங்களில்  27 பேர்  தரமற்ற அரிசியை  பொதுமக்களுக்கு விற்பனை செய்த ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தரமில்லாத அரிசியை வினியோகிக்க  காரணம் விவசாயிகளிடமிருந்து உரிய நேரத்தில் நெல்களை கொள்முதல் செய்யாதது தான். நெல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொடுக்கப்படும் நெல்கள்  அனைத்தும் தரமானது. இருப்பினும் அவர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு தாமதமாகும் நிலையில் அதன் தன்மை மங்கி பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அதனால்  விவசாயிகளிடம் இருந்து நெல்களை  பறிமுதல் செய்வதோடு அதனை உரிய முறையில் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |