Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த பல லட்சம் ரூபாய் பணம்… போலீசை கண்டதும் அடித்து பிடித்து ஓட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்த மர்மநபர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது .

சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது.இந்நிலையில் அதிகாலை 2.30மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஏ.டி.எம் மையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முரளி என்ற போலீஸ்காரர் ஏ.டி.எம் மையத்திற்குள் இருந்து சத்தம் வருவதை கேட்டு உடன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏ.டி.எம் மையத்துக்குள் சென்று உள்ளார்.

அப்போது அந்த மர்ம நபர் போலீஸ்காரர் வருவதைக் பார்த்த உடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது திருட முயற்சித்த மர்ம நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை மட்டுமே உடைத்து சென்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உரிய நேரத்தில் போலீஸ்காரர் வந்ததால் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த ரூ.20 லட்சம் பணம் தப்பித்து விட்டது. இதனையடுத்து போலீசார் ஏ.டி.எம் மையத்திற்குள் பொருத்தப்பட்டுயிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம் மையத்தை  உடைத்து  திருட  முயற்சி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |