Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…திறமை வெளிப்படும்…பணவரவு சீராகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!  சிலர் விமர்சனம் மனதில் உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தங்களின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் வேண்டும்.

நீண்ட தூரத்திலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதையும் திறமையாகச் செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று காதலர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |