தனுசு ராசி அன்பர்களே.! உறவுகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
இன்று லாபம் உங்களுக்கு இருமடங்காகும். உங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் இன்று கிடைக்கும். கடுமையான உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லக் கூடியவர்கள். நீங்கள் ஒரு விதம் இலட்சிய நோக்கோடு உங்களுடைய பயணங்கள் இருக்கும். வேண்டாத உறவுகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். சில காரியங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது தான் வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் உங்களுடைய திறமையை கண்டு மேலதிகாரிகள் இயக்கக் கூடும். பொன் பொருள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேற போடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சகோதர வழியில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் என்று காணப்படுவார்கள். மன தைரியம் கூடும் நாள். துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் பலப்படும் எல்லாவிதமான நல்லதும் நடக்கும். ஆர்வம் கூடிவிடும். புதுப்புது முயற்சிகளில் இன்று நாட்டம் செல்லும். புது புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். சுலபமாக உங்களால் எதுவும் செய்யமுடியும். நிதானம் இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். காதல் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு தைரியமான நாளாக அமையட்டும். மாணவர்கள் எதிலும் சிறப்பாக செயல்படக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்