Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… வேலையில் இழுபறி… முயற்சியில் வெற்றி….!!

தனுசு ராசி அன்பர்களே..!! இனிய அணுகுமுறையால் வாழ்வில் கூடுதல் நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். உபரி பண வரவில் சேமிப்பு உயரும். இஷ்டதெய்வ வழிபாட்டை நிறைவு செய்வீர்கள். இன்று தடைகளை தாண்டி நீங்கள் முன்னேறி செல்வீர்கள். செய்யும் முயற்சி எல்லாம்  வெற்றியை கொடுக்கும். சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும்.

வேலையில் இழுபறி எரிச்சல் போன்றவை இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உடல்நிலையிலும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவரிடம் பேசும்போது நிதானத்தை மேற்கொள்ளுங்கள். எந்த வித பிரச்னையும் வேண்டாம். தயவுசெய்து வாக்குவாதத்தில்  ஈடுபடாதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சீராக தான் இருக்கும். இருந்தாலும் உங்களுடைய தேவைகளுக்காக மற்றவர்களிடம்  நீங்கள் எந்தவித பிரச்சினைகளை செய்ய வேண்டாம், அதை மட்டும் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு  நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிஷ்ட எண்: 2  மற்றும் 6

அதிஷ்ட நிறம்: சிவப்பு  மற்றும் இளம் மஞ்சள்.

Categories

Tech |