தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மித்திரன் ஜவகஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்து வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தனுஷ் செல்வராக இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானத. சைக்கோ திரில்லர் படமாக உருவான இப்படத்தின் தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடத்தி மிரட்டி இருந்தார்.
கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றி தகவல்களை தயாரிப்பாளர் தானும் பகிர்ந்து உள்ளார். தொடர்ந்து. அப்போது தாணுவிடம் தனுஷின் சிறப்பான நடிப்பை பார்த்து அவர்தான் அடுத்த சிவாஜி, கமல் என்று கூறுகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாணு, நடிகர் திலகம் சிவாஜிக்கு மாற்று நடிகர் யாரும் கிடையாது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. தனுஷை கேட்டாலும். அவரும் இதேதான் சொல்லுவார். ஆனால் தனுஷ் தற்போது இருக்கும் நடிகர்களில் சிறந்தவர் ஆவார் என்று சொல்லலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.