Categories
கிரிக்கெட் விளையாட்டு

தன்மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி – தோனி…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆய்வை  அறிவித்து சில நிமிடங்களில், சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை வந்தடைந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ப்யூஸ் சவாலா, கெதர் ஜாதவ் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட  நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தோனி, ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீர் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை நன்றி இந்தியா என்று தெரிவித்துள்ளார். தோனி மற்றும் ரெய்னாவின் அடுத்தடுத்த இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இருக்கிறது.

Categories

Tech |