திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு நேரில் மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சருக்கு நன்றி. திமுக தோழமை கட்சியினர் மற்றும் பல துறைகளைச் சார்ந்த சான்றோர்களும் கண்ணீர் கலந்த நன்றி. திமுகவின் வெற்றியை கருணாநிதிக்கும் அன்பழகனுக்கு காணிக்கையாக்கிடுவோம் இது உறுதி.
திமுகவை வழிநடத்தும் தலைமை ஆற்றல் என்னிடம் உள்ளதாக பேராசிரியர் அன்பழகன் வாழ்த்தினார்.பேராசிரியர் கூறியதை அவர் வைத்த தேர்வில் தேறிய மாணவன் பெற்ற சான்றிதழாக கருதுகிறேன். அப்பாவையும் பெரியப்பாவையும் இயற்க்கை பறித்து கொண்ட சதியால் தனிப்பட்ட வகையில் கலங்கி நிற்கிறேன் என்று முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.