Categories
மாநில செய்திகள்

“தஞ்சை TO சென்னை”…. பகல் நேரத்தில் ரயில் சேவை….. உயர் நீதிமன்றத்தின் முடிவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜீவா குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள 11-வது பெரிய மாவட்டம் தஞ்சாவூர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதன் பிறகு சோழர்கள் கட்டிய பழமையான கோவில்கள் மசூதிகள் என பழமை வாய்ந்த பல கட்டிடங்களும் இருக்கிறது.

அதன்பிறகு தென்னிந்தியாவின் சிறந்த கலை மற்றும் வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாகவும் தஞ்சை விளங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தின் டெல்டா தலைநகரமாகவும், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடைபெறும் நகரமாகவும், சிறப்பான பட்டு தொழில் நடைபெறும் நகரமாகவும் விளங்குவதோடு, 5 பல்கலைக்கழகங்கள் மற்றும் 15 கல்லூரிகளும் அமைந்துள்ளது.

இந்த கல்லூரிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த தஞ்சைக்கு இரவு நேரத்தில் மட்டுமே சென்னையில் இருந்து ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரவு நேர ரயில் பயணத்தால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ‌ அதோடு ரயில் வசதி முறையாக இல்லாத காரணத்தினால் மாணவ-மாணவிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சிரமப்படுகிறார்கள்.

அதோடு விவசாய பொருட்களை முறையாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியாத சூழலும்‌ ஏற்பட்டுள்ளது. எனவே பகல் நேரத்தில் ரயில்களை இயக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பகல் நேரத்தில் ரயில்களை இயக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 2014-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ரயில் இயக்க கோரி தற்போது மனு எதுவும் அளூக்கப்பட்டுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அப்படி ஏதேனும் மனு கொடுத்திருந்தால் அந்த மனுவின் நகலை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கூறி வழக்கு விசாரணை 6 வார காலத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Categories

Tech |