Categories
உலக செய்திகள்

இவ்வளவு தான் விற்பனையாகும்…. தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகள்…. வெளியான தகவல்கள்…!!

தனியார் நிறுவனங்களான பைசர், மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் போன்றவை நடப்பு ஆண்டில் விற்பனையாகும் தடுப்பூசிகளின் அளவினை தெரிவித்துள்ளனர். 

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் பைசர், மாடர்னா, ஜான்சன்& ஜான்சன் போன்ற தனியார் நிறுவனங்களில் இருந்து தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனையடுத்து அமெரிக்க நாட்டில் பைசர், மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பிறகுதான் ஜான்சன்& ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிக்கி வருகின்றது.

மற்ற தடுப்பூசிகளான பைசர், மாடர்னா போன்றவற்றை ஒப்பிடும்பொழுது ஜான்சன்& ஜான்சன் உற்பத்தி மந்தமாகவே உள்ளது. இந்த ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிகள் கொண்டு சேர்க்க முடியாத இடங்களுக்கு கொண்டுவரப்படும்  என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பைசர் நிறுவனம் 26 பில்லியன் தடுப்பூசிகளையும், மாடர்னா நிறுவனம் 19.2 பில்லியன் தடுப்பூசிகளையும், ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் 2.5 மில்லியன் தடுப்பூசிகளையும் இந்த நடப்பு ஆண்டில் விற்பனையாக்கும் என அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் குறிப்பாக ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிகளினால் ரத்தம் உறைதல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |