Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விற்பனையாகும் தங்க பத்திரம்…. ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடும் இந்திய அரசாங்கம்…. அறிக்கை விடுத்த முதுநிலை கண்காணிப்பாளர்….!!

திருநெல்வேலியில் தங்க பத்திரத்திற்கான விற்பனை தபால் நிலையங்களில் தொடங்கியுள்ளது.

இந்திய அரசாங்கம் தங்க பத்திரத்திற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடுகிறது. அதற்கான விற்பனை நேற்று முதல் ஆரம்பமாகி வருகின்ற 4 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் ஒரு நிதியாண்டிற்கு தனிநபர் குறைந்தபட்சமாக 1 கிராம் அளவிலிருந்து அதிகபட்சமாக 4 கிலோ வரையில் வாங்கலாம். அதுமட்டுமின்றி முதலீடு செய்யும் தொகைக்கு 2.5 சதவீத வட்டி மற்றும் 8 வருடங்கள் கழித்து முடிவடையும் போது அன்று தங்கம் விற்கும் விலைக்கு நிகராக பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தங்க பத்திரத்தை பெற விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பம், ஆதார் கார்டு, பான் கார்டு பாஸ்போட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியினுடைய கணக்குப் புத்தகத்தினுடைய முதல் பக்க ஜெராக்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அனைத்து தபால் நிலையத்திலும் தங்க பத்திரத்தை விண்ணப்பித்து பெறலாம். இதனை நெல்லை தபால் துறையினுடைய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளரான வாசுதேவன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |