Categories
உலக செய்திகள்

“ரயிலில் ஏற முயற்சி”… தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்… இறுதியில் நேர்ந்த சோகம்…!!

ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நபருக்கு ஒரு கால் துண்டாகி விட்டது.

பிரான்சில் உள்ள Port De Calais- லிருந்து பிரிட்டன் நோக்கி சரக்கு ரயில் ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயிலில் அகதி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக திடீரென்று கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் ரயிலுக்குள் சிக்கி அவரது ஒரு கால் துண்டாகி விட்டது. அதற்குப் பின்பு உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த நபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்பு, அவரது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கிய அகதி எந்த நாட்டை சேர்ந்தவர் ? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். எனவே விசாரணைக்கு பின்பு அந்த நபர் குறித்த  தகவல் முழுவதுமாக வெளிவரும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |