இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனே அரவணைத்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் சாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் சாதித்துள்ளார். தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டு குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகயுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் வைத்து “லால் சலாம்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கு பிறகு தனது மகன் லிங்காவுடன் சேர்ந்து எடுக்கும் மாசான போட்டோக்களை இன்ஸ்டவில் பதிவிட்டு வருகின்றார். இந்த போட்டோஸ்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.