Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தன் மகனின் காதணி விழா… ஊரையே அசரவைக்கும் விருந்து வைத்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன் மகனின் காதணி விழாவிற்கு 108 கிடாய் வெட்டி கோவிலில் விருந்து வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உள்ள முடிக்கரை கிராமத்தில் வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் பிரபாகரனின் காதணி விழாவை நடத்தினார். அந்த விழாவில் சீமானின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். மகனின் காதணி விழா நடத்துவதற்கும் குலதெய்வ வழிபாட்டிற்கா வந்தாகவும் 108 கிடாய்கள் வெட்டி விருந்து வைத்து மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக கூறினார். அப்போது சீமான் கூறியது ,”விவசாயிகள் ஏன் இன்னும் கடனாளியாகவே இருக்கிறார்கள். எப்போது விவசாயிகளை கடன் இல்லாதவர்களாக பார்க்கப் போகிறோம். நெல் மற்றும் தவிடுகளை விற்பவன் கூட பணக்காரனாக இருக்கிறான் .ஆனால் விளைவிதைத்தவன் ஏன் கடனாளியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறுகிறார்கள். இங்கு அடிப்படையிலேயே பிரச்சனை இருக்கிறது. உழவம் தன் பொருள்களுக்கு எப்போது உற்பத்தி விலையை அவனை நிர்ணயம் செய்யகிறானோ அப்போதுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

பிறகு பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்பாகவே மட்டும் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறுவப்பட்டது அது இப்போது வரை தொடங்கியதா? ஒவ்வொரு நிதி அறிக்கையிலும் என்ன செய்கிறார்கள் வெறும் அறிவிப்பு மற்றும் பசிப்பு வார்த்தைகள் மட்டுமே உள்ளது. நிதி இருக்கிறது என்றால் ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை ஏற்க மறுக்கிறார்கள். பிரதமர் மோடி எப்பொழுதும் ஏமாற்று வார்த்தைகளை மட்டுமே கூறுகிறார். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் கச்சா எண்ணையின் விலை குறைவாக இருக்கும்போது பெட்ரோல் டீசல் விலை மட்டும் எவ்வாறு உயர்கிறது. இவையெல்லாம் தனியார் மயமாகி வருவதால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலையை ஏற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதை நாம் தான் மாற்ற வேண்டும். மேலும் முடிகரையில் தொல்லியல் ஆராய்ச்சி செய்யது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த்து  மரம் செடி கொடிகள் மக்கி கரியானது. அப்போது புகுந்த காற்று மீத்தேனாக பூமியில் புதைந்தது அதுபோலதான் கீழடியும் உள்ளது. முடிகரையில் நடக்க இருக்கும் தொல்லியல் ஆய்வுகளை நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.

Categories

Tech |