Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை… ஒரே நாளில் இவ்வளவு கோடி பறிமுதலா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அலுவலங்களில் பொதுமக்களிடம் பரிசு என்ற பெயரில் காயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகும். அதனை போல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அரசு தொடர்புடைய பணிகளை செய்பவர்கள் பரிசுகள் வழங்குவதாக கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் பெறுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த அரசு அலுவலக லஞ்ச ஒழிப்புத்துறை என வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்தச் சோதனையில் 27 அலுவலகங்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ஒரு கோடி ரூ.1,1257,803 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நெடுஞ்சாலைத்துறை திருவாரூர் கோட்டை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக நெடுஞ்சாலை துறை நாமக்கல் மாவட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தில் ரூ.8.87 லட்சும், விருதுநகர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.6.67 லட்சமும், விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.4,26,280, திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் ரூ‌3.55 லட்சம், கிருஷ்ணகிரி போக்குவரத்து துறை சோதனை சாவடியில் ரூ.2.25 லட்சம், திருவண்ணாமலை மாவட்ட செங்கல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.1.31 லட்சம், ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.27 லட்சம், நாகை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் ரூ.1.19 லட்சம், திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ரூ.1.01 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது இதனையடுத்து எஞ்சிய இடங்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவான ரொக்கமே கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை நடத்துவதற்காக விரைவில் அழைப்பாணை அனுப்ப உள்ளனர். விசாரணையில் அவர்கள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |